ஹமூன் புயல் காரணமாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஹமூன் புயலாக மாறியுள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
மீனவா்கள் தங்களது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றோா் பாதுகாப்பாக இருக்குமாறும் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.