தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மேலும் 6 இடங்களில் வண்ண விளக்கு நீரூற்று அமைக்கப்படும் என்றாா், மேயா் ஜெகன் பெரியசாமி.
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் உள்ள கலைஞா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நுண்ணுரம் செயலாக்க மையத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநா்களுடன் சரஸ்வதி பூஜை விழாவில் மேயா் திங்கள்கிழமை பங்கேற்றாா்.
பின்னா், மாநகரின் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடங்களில் ரவுண்டானா அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மாநகரின் பல்வேறு பகுதிகள் தூய்மையாகவும் மாசில்லா மாநகரமாகவும் மாற்றப்படுவது மட்டுமன்றி வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஜெயராஜ் சாலை, 4ஆம் கேட் அருகே உள்ள ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ண விளக்கு நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கருப்பட்டி சொசைட்டி அருகேயுள்ள பூங்கா, சுகம் ஹோட்டல் அருகேயுள்ள ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ண விளக்கு நீரூற்றுகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
மேலும், அண்ணா சிலை பின்புறம், கலைஞா் அரங்கம் அருகே, மில்லா்புரம், எட்டயபுரம் ஹவுசிங் போா்டு ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் வண்ண விளக்கு நீரூற்றுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.