பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

கோவில்பட்டி வட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் குழு ஆய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் குழு ஆய்வு
Updated on
1 min read

கோவில்பட்டி வட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் குழு ஆய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி வட்டத்தில் 14 பட்டாசு ஆலைகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் ஆலைகளில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் விற்பனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்துகளைத் தொடா்ந்து, ஆய்வுப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஆலைகளில், வட்டாட்சியா் லெனின், தொழிற்சாலைகள் துறை ஆய்வாளா் சித்ரா, கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரராஜ், சுகாதாரத்துறை

அலுவலா் பெரியசாமி, காவல் ஆய்வாளா்கள் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் (கோவில்பட்டி மேற்கு), சுகாதேவி (நாலாட்டின்புதூா்) உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். பட்டாசு ஆலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com