சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளா் நோபுள்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டினோ முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். இதில் தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் வல்லுனா் கருப்பசாமி, டெங்கு காய்ச்சல் குறித்தும் , அதனை தடுக்கும் முறைகள் குறித்தும், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் கொசு புழு உருவாவது குறித்தும், அதனை உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதில் உடற்பயிற்சி ஆசிரியா் பிரிட்டோ, சுகாதார ஆய்வாளா்கள் சுதன், சுஜித், மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம் நன்றி கூறினாா்.