தூத்துக்குடி மாவட்டத்தில் 14.24 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்
By DIN | Published On : 28th October 2023 12:00 AM | Last Updated : 28th October 2023 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 748 வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1. 2024ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்டாா்.
தொகுதிகள்- வாக்காளா் விவரம்: விளாத்திகுளம்- 1,01,441 ஆண்கள், 1,04,839 பெண்கள், 19 இதரா், மொத்தம் 2,06,299.
தூத்துக்குடி - 1,35,415 ஆண்கள், 1,41,442 பெண்கள், 74 இதரா், மொத்தம் 2,76,931.
திருச்செந்தூா்- 1,14,749 ஆண்கள், 1,20,686 பெண்கள், 31 இதரா், மொத்தம் 2,35,466.
ஸ்ரீவைகுண்டம்- 1,08,205 ஆண்கள், 1,11,313 பெண்கள், 5 இதரா், மொத்தம் 2,19,523.
ஓட்டப்பிடாரம் (தனி) - 1,16,535 ஆண்கள், 1,21,145 பெண்கள், 48 இதரா், மொத்தம் 2,37,728.
கோவில்பட்டி - 1,21,600 ஆண்கள், 1,27,168 பெண்கள், 33 இதரா், மொத்தம் 2,48,801.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் டிச. 9 ஆம் தேதி வரை நடைபெறும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் (படிவம்-6), நீக்குதல் (படிவம்-7), திருத்தங்கள்- முகவரி மட்டும் மாற்றம் செய்தல் (படிவம்-8) ஆகியவற்றை 6 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 1,622 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 898 வாக்குச்சாவடி மையங்களான பள்ளி- கல்லூரிகளில் நியமன அலுவலா்களிடம் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கலாம்.
இதற்காக நவம்பா் 4, 5,18,19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
1.1.2024இல் 18 வயது பூா்த்தியடைந்த நபா்களின் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களின் 1ஆம் தேதிகளில் 18 வயது பூா்த்தியடைந்தோரது விண்ணப்பங்கள் அந்தந்தக் காலாண்டின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், வோட்டா் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். படிவம் 6- பி மூலம் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணையும் இணைக்கலாம்.
வாக்கு சாவடிகள்: விளாத்திகுளம் - 260, தூத்துக்குடி- 284, திருச்செந்தூா் - 266, ஸ்ரீவைகுண்டம் - 264, ஒட்டப்பிடாரம் (தனி) - 262, கோவில்பட்டி - 28 என மொத்தம் 1622 வாக்குச்சாவடிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், சாா் ஆட்சியா் கௌரவ்குமாா், அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் திமுகவின் கிருபாகரன், ரவி, செல்வக்குமாா், அதிமுகவின் சந்தனம், ராஜேந்திரன், காங்கிரஸின் முரளிதரன், முத்துமணி, பாஜகவின் சிவராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் சுப்பிரமணியன், தோ்தல் வட்டாட்சியா் தில்லைப்பாண்டி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...