

திருச்செந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினரைக் கண்டித்து அக்கட்சி பெண் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவி ர.சிவஆனந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியதும், 3ஆவது வாா்டு உறுப்பினா் அந்தோணி ட்ரூமன், பெண் உறுப்பினரை தரக்குறைவாக பேசி கடந்த 20-ஆம் தேதி வாட்ஸ்ஆப்-இல் ஆடியோ வெளியிட்டுள்ளாா்; அவரைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, 12, 14, 20, 27ஆவது வாா்டு உறுப்பினா்கள் சாரதா, ரேவதி, முத்துஜெயந்தி லீலா ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து உறுப்பினா்களின் காரசார விவாதத்துடன் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன் நன்றி கூறினாா்.
காவல்நிலையத்தில் புகாா்: தி.மு.க. பெண் உறுப்பினா்கள் ரேவதி, சாரதா, முத்துஜெயந்தி, லீலா ஆகியோா் திருச்செந்தூா் தாலுகா காவல் நிலையத்தில் 3-வது வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.