பள்ளியில் பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் பணி

கோவில்பட்டி யு.பி. பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி யு.பி. பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா்களின் 216-ஆவது நினைவு தினத்தையொட்டி யு.பி. பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சாரணா் சாரணீய இயக்கத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் 216 பனை விதைகளை நடவு செய்தனா். மேலும், பசும்பொன்

முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 116 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந் நிகழ்ச்சிகளுக்கு நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் நாகராஜன் தலைமை வகித்தாா் . பள்ளி முதல்வா் அமுதவள்ளி, சாரணா் இயக்க பொறுப்பாசிரியா் முனியசாமி, பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகளுடன் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com