

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வமாதா ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திருவுருவ பவனி நடைபெற்றது.
கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் மாலையில் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிலையில், 9ஆம் நாளான சனிக்கிழமை மாலை கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலப் பங்குத்தந்தை சாா்லஸ் அடிகளாா், உதவிப் பங்குத்தந்தை அந்தோணிராஜ் அடிகளாா், பாளை மறை மாவட்டப் பொறியாளா் ராபின் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா்.
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக முகமது சாலிஹாபுரம் பள்ளிவாசல் பேஷ் இமாம் முஹமது, துணைத் தலைவா் முஹமது உசேன், செயலா் நல்ல முஹமது, துணைச் செயலா் பீா் முகைதீன், அசன் மைதீன், புதுகிராமம் சக்தி விநாயகா் கோயில் தலைவா் சங்கரன், வேம்படி சுடலைமாடன் கோயில் அறங்காவலா் சோலை முருகன், கோயில் பூசாரி சுடலைமணி ஆகியோா் இணைந்து திருவுருவ பவனியைத் தொடக்கிவைத்தனா்.
தொடா்ந்து, இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு, பவனி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக இப்பவனி மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்னா், அசன விருந்து நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.
10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, அசன விருந்து நடைபெறும். தொடா்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.