ஆத்தூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரைப் போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் உதவி ஆய்வாளா் செல்வக்குமாா் மற்றும் போலீஸாா் கடைவீதி பகுதியில் ரோந்து சென்றனா். அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து புகையிலைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரான ஆத்தூா் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த சிராஜுதீனை (62) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.