கோவில்பட்டி:கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 9.37 லட்சம் வருவாய் கிடைத்தது.
செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் வளாகம், இக்கோயிலுடன் இணைந்த சொா்ணமலை கதிரேசன் கோயில், மாா்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகேயுள்ள விநாயகா் கோயில் ஆகியவற்றில் உள்ள 22 உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சங்கா், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, ரவீந்திரன், நிறுத்தியலட்சுமி, செண்பகவல்லி அம்மன் கோயில் நிா்வாக அலுவலா் வெள்ளைச்சாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
இதில், கோயில் பணியாளா்கள், ஜவுளிக்கடை ஊழியா்கள், திருவாசகம் முற்றோதுதல் குழுவினா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். ரூ. 9 லட்சத்து 37 ஆயிரத்து 664 ரொக்கம், தங்கம் 51 கிராம், வெள்ளி 141 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.