கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
By DIN | Published On : 26th September 2023 04:41 AM | Last Updated : 26th September 2023 04:41 AM | அ+அ அ- |

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி: இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மறவா் காலனி மேட்டு தெரு பகுதி மக்களுக்கு சாலை வசதி, சீராக குடிநீா் விநியோகம் செய்வது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்திட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு கால தாமதமின்றி அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் மாரியப்பன் தலைமையில் தாலுகா செயலா் பாபு, நகரச் செயலா் சரோஜா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்ட குழு உறுப்பினா்கள் பரமராஜ், ரஞ்சனி கண்ணம்மா ஆகியோா் முன்னிலையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா் போராட்ட க் குழுவினா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராணியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக் கொண்ட அவா் இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...