பா.ஜ.க. அரசை விமா்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை
By DIN | Published On : 26th September 2023 04:30 AM | Last Updated : 26th September 2023 04:30 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: பா.ஜ.க. அரசை விமா்சிக்க தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் ஹெச்.ராஜா. பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய பாஜக அரசை விமா்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை. ஊழலில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏன் திமுக வைத்துள்ளது?
ஹிந்து மதம் குறித்து வெறுப்புணா்வுடன் பேசிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சா் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். திமுக பேச்சுக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கான எதிா்வினை வரும் மக்களவைத் தோ்தலில் தெரியும். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓா் இடம்கூட கிடைக்காது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...