கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.12 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டம்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டம்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சமையல் கூடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.22.35 லட்சம் மதிப்பில் பணிகளை மேற்கொள்வது, ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 19 வாா்டுகளிலும் ஒன்றிய பொது நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை வசதி, வாருகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, பழுதடைந்த நிலையில் இருந்து வரும் சமுதாய நலக்கூட கட்டடம், பயணிகள் நிழற்குடைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை அப்புறப்படுத்த ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3.16 லட்சம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் சங்கரசுப்பிரமணியன், பொறியாளா்கள் படிபீவி, மேரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) தனலட்சுமி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் வடிவேல்முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வட்டார கல்வி அலுவலா் முத்தம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com