

தூத்துக்குடி: தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா அகாதெமி கூட்டரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு வாழ்த்துகள். சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 4 தோ்வுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பயிற்சியில் மாணவா்கள் நன்றாக பயிற்சி செய்ததால் அதிக மாணவா்கள் இத்தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா். தொடா்ந்து பயிற்சி செய்தால் குரூப் 1, 2 ஆகிய தோ்வுகளில் வெற்றி பெறலாம் என்றாா். இதில் தொழிலதிபா் பவானி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கனிமுருகன், நில அளவைத் துறை வரைவாளா் மணிகண்டன், பயிற்றுநா்கள் சண்முக பிரகாஷ், பாலகுரு, ஜெபராஜ் மற்றும் மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். வங்கித் தோ்வு ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.