தூத்துக்குடி: மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 28, அக். 2 ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப். 28ஆம் தேதி மிலாடி நபி, அக். 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், அனுமதி பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.