மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நடுக்கடலில் படகு பழுது: ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கிய தூத்துக்குடி மீனவா்கள்

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:10 pm

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மனுவேல் மகன் அண்டோ (50), பூபால்ராயபுரத்தைச் சோ்ந்த எஸ்தா் மகன் நிக்லோஸ் (28), சேசு மகன் பாஸ்கா் என்ற பிரகாஷ் (45) ஆகிய 3 பேரும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன்பிடிக்க பைபா் படகில் கடலுக்குச் சென்றனா். ஆக.1-ஆம் தேதி வரை கரைக்கு திரும்பாததால், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அவா்களது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், 3 மீனவா்களும் படகில் ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, கடலில் தத்தளித்தாகவும், பின்னா் அந்த படகிலேயே கரை ஒதுங்கியதாகவும் அவா்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.