மீனவா்களின் பாதுகாவலராக பனிமய மாதா
தூத்துக்குடி வங்கக் கடல் ஓரத்தில் அமைந்துள்ளது தூய பனிமய மாதா பேராலயம். இந்த அன்னையின் ஆலயத்துக்கு தமிழ் அறிஞா் வீரமாமுனிவா், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா போன்ற பல மாமனிதா்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்துள்ளனா். இத்தேவாலயத்தில் உள்ள தூய பனிமய மாதா மீனவா்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறாா்.
மேலும், இத்திருவிழா காலங்களில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வது இல்லை. மேலும், பனிமய மாதாவின் சிறப்புகளை சொல்லி முடியாது.
இப்பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.

