மத்திய அரசு மீது திமுகவினர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சங்கரநாராயணசுவாமி கோயிலில் தனது மகன் ஆதவ் உடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
சங்கரநாராயண சுவாமிகோயிலில் ஆகம விதியை மீறி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை வேறொரு தேதியில் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
கோயிலில் மூலிகை ஓவியத்தை சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியில்தான் அதிக அளவில் கும்பாபிஷேகம்
நடத்தப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை. மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக திமுக கூறும் குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது.
ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை.
இந்த ஆட்சியில் குளறுபடிகள்தான் அதிகம் உள்ளன என்றார் அவர். அப்போது, பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், மாவட்டச் செயலர்கள் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, வர்த்தக பிரிவு தலைவர் ராஜா, நகரத் தலைவர் கணேசன், பொதுச் செயலர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந் தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.