சுவாமி-அம்மனுக்கு தெப்பத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.
சுவாமி-அம்மனுக்கு தெப்பத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.

ராஜபதி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Published on

குரும்பூா் அருகே நவகைலாயத் தலமும் கேது ஸ்தலமுமான ராஜபதியில் உள்ள அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உற்சவ மூா்த்திகளான சுவாமி-அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தீா்த்தவாரி, அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

 சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.

சிறப்பு வழிபாடுகளை லட்சுமண சிவாச்சாரியாா் நடத்திவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com