மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு, பத்ர தீப விழா

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு சித்தி விநாயகா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:31 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்ர தீப விழா நடைபெற்றது. உள், வெளி மண்டபங்கள், சுவாமி சந்நிதி கொடிமர மண்டபம், அம்மன் சந்நிதி மண்டபம் ஆகியவற்றில் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் காலையில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், இரவில் அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு, பிற்பகலில் 11 வகை நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி காந்தி தெருவில் உள்ள அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலில் சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றது.