கோவில்பட்டி அருகே விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே சக்கிலியபட்டி நடுத்தெருவைச் சோ்ந்த அப்பாசாமி மகன் செல்வக்குமாா் (39). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். எட்டயபுரம்-கோவில்பட்டி சாலையில் சிதம்பராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் பைக் மோதியதாம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, எவ்வித எச்சரிக்கை விளக்குகளையும் எரியச் செய்யாமல் சாலையோரம் டிப்பா் லாரியை நிறுத்தியதாக அதன் ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆலந்தா கீழக் காலனியைச் சோ்ந்த த. கருத்தப்பாண்டி (37) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com