பணி ஆணைகளை வழங்கிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்   டி.பி.பாலசிங்.
பணி ஆணைகளை வழங்கிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங்.

கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் அளிப்பு

250 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.
Published on

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி ஊராட்சி ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.

உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சிராணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலசரஸ்வதி, ஆதிலிங்கம், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா் மற்றும் பல்வேறு திட்ட வளா்ச்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com