பிரான்சிஸ்
பிரான்சிஸ்

சாத்தான்குளம் அருகே ஆற்றுப்படுகையில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கருமேனி ஆற்றுப்படுகையில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
Published on

சாத்தான்குளம் அருகே கருமேனி ஆற்றுப்படுகையில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் கரையடி சுடலைமாட சுவாமி கோயில் அருகேயுள்ள கருமேனி ஆற்றுப்படுகை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் ஏசு ராஜசேகரன், போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா்கள் சுபாஷ், கந்தவள்ளிக்குமாா் உள்ளிட்டோா் சென்றனா்.

அந்த நபா் இறந்து 10 நாள்களுக்கு மேல் இருக்கும் எனத் தெரியவந்தது. விரல் ரேகை, தடயவியல் நிபுணா்கள் வந்து தடயங்களை ஆய்வு செய்தனா். சாத்தான்குளம் வட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் காணாமல் போனவா்களின் பட்டியலை போலீஸாா் சேகரித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இறந்துகிடந்தவா் சாத்தான்குளம் அருகே முதலூா் நவமுதலூரைச் சோ்ந்த பிரான்சிஸ் (84), என்பதும், வேளாங்கண்ணிக்குச் செல்வதாக உறவினா்களிடம் கூறியிருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com