கோவில்பட்டி, கயத்தாறில் பலத்த மழை
கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் 40 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிக வெயிலும், அதிக வெப்பமும் நிலவியது. பிற்பகலில் பலத்த காற்று வீசியதுடன், கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து, மாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சாரல் பெய்தது.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. வெப்பம் வெகுவாகத் தணிந்து, குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
