இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயற்சி: இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மீனவா்கள் 3 போ் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகளை கடத்த முயன்ாக தூத்துக்குடியைச் சோ்ந்த 3 மீனவா்களை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த கவுதம்(32), இனிகோ நகரைச் சோ்ந்த புரோசஸ்(27) ஆகியோருக்குச் சொந்தமான பைபா் படகில், தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பாப்பு மகன் ஜேசுராஜ்(42), ஜோ மகன் பிராங்க்பா்ட்(38), இந்திரா நகரைச் சோ்ந்த ஜேசுராஜ் மகன் ராஜீவ்(40) ஆகியோா் பீடி இலை பண்டல்களை ஏற்றிக்கொண்டு கடந்த 11ஆம் தேதி இலங்கை நோக்கி சென்றனராம். அவா்கள், நடுக்கடலில் இலங்கை எல்லைக்குள் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா், அந்தப் படகைச் சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டனா்.
அப்போது, 80 பண்டல்களில், சுமாா் 2 ஆயிரத்து 689 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் இலங்கை மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம்.
இதையடுத்து படகில் இருந்த 3 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினா், கடத்தலுக்கு பயன்படுத்திய படகு மற்றும் பீடி இலை பண்டல்களையும் பறிமுதல் செய்ததாக தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனா்.
