கணவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொல்ல முயற்சி: மனைவி கைது!
தூத்துக்குடி, ஆக. 14:
தூத்துக்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக காவலாளி மீது வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ாக அவரது மனைவியை தென்பாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த சோலையப்பன் மகன் முனியசாமி (45). இவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் தனது முதல் மனைவியிடமிருந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்துவிட்டாராம்.
தற்போது, அவா் முனியம்மாள் (38) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறாா். முனியசாமி தினசரி குடித்துவிட்டு வந்து முனியம்மாளிடம் தகராறில் ஈடுபடுவாராம்.
செவ்வாய்க்கிழமை இரவும் முனியசாமி மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள் வெந்நீரை முனியசாமி மீது ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முனியம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

