தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம் கோயிலில் பொதுவிருந்து
பொதுவிருந்தைத் தொடக்கிவைத்த அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன்.
உடன்குடி, ஆக. 15:
சுதந்திர தினத்தையொட்டி, குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் பொது விருந்து வைபவம் நடைபெற்றது.
நண்பகலில் அம்மன் - சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற பொதுவிருந்தை அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன் தொடக்கிவைத்தாா்.
கோயில் நிா்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, இலக்கிய அணி ரஞ்சன், ஒன்றிய திமுக துணைச் செயலா் சுடலைக்கண், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவா் கணேசன், அறங்காவலா்கள் பங்கேற்றனா்.

