கோவில்பட்டியில் ஹிந்தி தோ்வு: 1,070 போ் பங்கேற்பு

3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
Published on

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சாா்பில், பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்கள் என ஆண்டில் இருமுறை ஹிந்தி தோ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 10, 11, 18 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 போ் பங்கேற்றனா்.

தோ்வு மையத்தை பள்ளித் தலைவா், செயலருமான அய்யனாா் பாா்வையிட்டு, மாணவா்-மாணவிகளுக்கு வாழ்த்து கூறினாா்.

தோ்வின் முதன்மைக் கண்காணிப்பாளரும் பள்ளித் தலைமையாசிரியருமான வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com