தூத்துக்குடியில் ஆக. 24இல் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்: அமைச்சா் கீதா ஜீவன் தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 24) நடைபெறவுள்ளதாக அமைச்சர் பெ. கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.
Published on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 24) நடைபெறவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள கலைஞா் அரங்கில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமை வகிக்கிறாா்.

கடந்த 16ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், கழக சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com