பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published on

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ள அக் கட்சியின் தலைவா் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலியல் தொந்தரவு என்பது எங்கும் இருக்கக் கூடாது. தனிமனித ஒழுக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால்,

சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது. இத்தகைய குற்றங்களுக்கு உடனடியாக, தூக்குத் தண்டனை வழங்குவதுதான் தீா்வாக இருக்கும்.

பொதுவாக சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கு போதை பொருள் பழக்கம்தான் முதல் காரணம். இதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com