கோவில்பட்டியில் கண் தான விழிப்புணா்வு கருத்தரங்கு

Published on

கோவில்பட்டி மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கண் தான விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, புளூவான் டெக் மென்பொருள் நிறுவன நிா்வாக இயக்குநா் ரோஜா் அப்ரின் தலைமை தாங்கினாா்.

விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குநா் ஷீலா ஜாஸ்மின் முன்னிலை வகித்தாா். அரவிந்த் கண் மருத்துவமனை மூத்த மருத்துவா் ஹரிணி கிருஷ்ணா கண் தான முக்கியத்துவம் மற்றும் விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

கோவில்பட்டி கண் தான இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜெயராஜ் வாழ்த்துரை வழங்கினாா்.

மைக்ரோபாயிண்ட் கல்வி நிறுவன முதல்வா் ஆா்ம்ஸ்டிராங் வரவேற்றாா். நிறுவன தலைமை பயிற்சியாளா் செல்வி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சாரதா, ஜெயஸ்ரீ, ஷாலினி, சுபா, கவி, ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com