தூத்துக்குடி
ஏடிஎம் மையத்தில் திருட்டு முயற்சி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா் கைது
தூத்துக்குடியில், தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ாக, மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி துறைமுகச் சாலை வேல்ட் டிரேஸ் அவென்யூ பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா் உடைக்க முயன்றாராம். அப்போது, அங்குள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததால், அவா் தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து வங்கியின் மட்டக்கடைக் கிளை மேலாளா் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினா். விசாரணையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ரியாத் (50) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
