மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

சாத்தான்குளத்தில் மனிதச் சங்கிலி போராட்டம்

Published on

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சாத்தான்குளம் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இப்போராட்டத்திற்கு வழக்குரைஞா்கள் சங்க செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். சங்க பொருளாளா் அருண்மணிகண்டன், வழக்குரைஞா்கள் அந்தோணி ரமேஷ்குமாா், மணிமாறன், வேணுகோபால், சுடலைமுத்து, ஈஸ்டா்கமல், கோபாலகிருஷ்ணன், ரோஸ்லீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com