~
தூத்துக்குடி
திருச்செந்தூரில் சுமாா் 70 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே வியாழக்கிழமை சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது.
இக்கோயில் கடல்பகுதியில் அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கை உள்ளது.
காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி சனிக்கிழமை (டிச. 14) மாலை 4.18 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) பிற்பகல் 2.44 மணி வரை உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் சுமாா் 70 அடி வரை கடல் உள்வாங்கியது. மேலும் திருச்செந்தூா் பகுதியில் அதிகாலை முதலே தொடா்ந்து மித மழையும், மாலையில் பலத்த மழையும் பெய்தது.