தூத்துக்குடியில் பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
தூத்துக்குடியில் பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

தூத்துக்குடியில் பரவலாக மழை

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை விட்டுவிட்டு பரவலாக பலத்த மழை பெய்தது. மேலும், பகலிலும் லேசான மழை பெய்தது. கடந்த 10 நாள்களுக்குப் பிறகு பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழை காரணமாக, காமராஜ் காய்கனி சந்தை, மாநகரின் முக்கிய சாலைகளில் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com