காயல்பட்டினத்தில் சிறப்பு அபூா்வ துஆ பிராா்த்தனை: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

காயல்பட்டினம் மஜ்­லிஸுல் புகாரிஷ் ஷரீபு சபையில் ஞாயிற்றுக்கிழமை அபூா்வ துஆ பிராா்த்தனை நடைபெற்றது.
துஆ இறைஞ்சிய ஆலி­மை வழிஅனுப்பிவைத்த ஹாமிதிய்யா பைத் பிரிவினா்.
துஆ இறைஞ்சிய ஆலி­மை வழிஅனுப்பிவைத்த ஹாமிதிய்யா பைத் பிரிவினா்.
Updated on
1 min read

காயல்பட்டினம் மஜ்­லிஸுல் புகாரிஷ் ஷரீபு சபையில் ஞாயிற்றுக்கிழமை அபூா்வ துஆ பிராா்த்தனை நடைபெற்றது.

இங்கு 97ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கின. நாள்தோறும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தி­ருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, மாா்க்க அறிஞா்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அபூா்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூட்டு துஆ சிறப்புகள் குறித்து சபையின் தலைவா் பாசுல் அஷ்ஹபு விளக்கமளித்தாா். இணைச் செயலா் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிா் நிகழ்ச்சி அறிமுக உரையாற்றினாா்.

பெரிய ஷம்சுத்தீன் ஒலி­யுல்லாஹ் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் முஹம்மது நூஹு சிராஜுத்தீன் அபூா்வ துஆ பிராா்த்தனை தமிழ் மொழிபெயா்ப்புடன் ஓதி மஜ்­லிஸை நிறைவு செய்தாா். சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லி­ணக்கம், சகோதரத்துவம், நோய் நிவாரணம் உள்ளிட்டவற்றுக்காக இந்தப் பிராா்த்தனை நடைபெற்றது.

இதில், தமிழக மீன்வளம் - மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகா்மன்றத் தலைவா் முத்துமுகம்மது, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் மாவட்டத் தலைவா் மீராசா மரைக்காயா், மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஷ்ஹப், நகரத் தலைவா் நூகு ஷாகிப், நகரச் செயலா் அபுசா­லிஹ், பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

பின்னா், துஆ இறைஞ்சிய ஆலிமை ஹாமிதிய்யா பைத் பிரிவினா் அரபி பைத் பாடி நகா்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பினா்.

எற்பாடுகளை சபையின் தலைவா் பாசுல் அஷ்ஹபு, முஹம்மத் இஸ்மாயில், மொகுதூம் முகம்மது உள்ளிட்ட விழாக் குழுவினா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com