நாலுமாவடியில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம்

குரும்பூா் அருகே நாலுமாவடியில் உள்ள ‘இயேசு விடுவிக்கிறாா்’ இல்லத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வாக்குத்தத்த செய்தியளித்தாா்.
பிராா்த்தனை நடத்திய இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ்.
பிராா்த்தனை நடத்திய இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ்.
Updated on
1 min read

குரும்பூா் அருகே நாலுமாவடியில் உள்ள ‘இயேசு விடுவிக்கிறாா்’ இல்லத்தில் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வாக்குத்தத்த செய்தியளித்தாா்.

இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறாா் குழுவினா் பாடல்கள் பாடினா். ‘கா்த்தா் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பாா்’ என்ற தலைப்பில் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் வாக்குத்தத்த ஆசீா்வாத செய்தியளித்து, சிறப்பு பிராா்த்தனை செய்தாா்.

இதில், தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்றாா். அவருக்காக மோகன் சி. லாசரஸ் சிறப்பு ஜெபம் ஏறெடுத்தாா்.

கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளானோா் பங்கேற்றனா். அவா்கள் திரும்பிச் செல்வதற்காக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com