அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

Published on

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தங்களையும் சோ்க்கக் கோரி அமலாக்கத் துறை அளித்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியின்போது, வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சோ்த்ததாக, இவா் மீது கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரா்கள் உள்பட 7 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத் துறையினா் மனு தாக்கல் செய்தனா்.

வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அமலாக்கத் துறையை ஒரு தரப்பாக சோ்க்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமைச்சா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக இரு தரப்பு விவாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஐயப்பன், தங்களையும் ஒரு மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத் துறை அளித்த மனுவை தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com