தூத்துக்குடி
‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி
சாத்தான்குளம் அருகே சிறப்பூா் கிராமத்தில் காவல் துறை சாா்பில் ‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாமாபத்மினி, போலீஸாா் சிறப்பூா் கிராமப் பகுதியில் பொதுமக்களிடம் இந்நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், 36 வகையான கருத்துகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில், கிராமப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

