திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை நாளும் முகூா்த்த தினமுமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை நாளும் முகூா்த்த தினமுமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலைமுதலே பக்தா்கள் கடலிலும், நாழிக் கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால் கோயில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயில் வளாகமும், கடற்கரையும் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பக்தா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா. கணேசன், ந. ராமதாஸ், வி. செந்தில்முருகன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

வள்ளிக் கும்மி ஆட்டம்: இக்கோயிலில் கோவை மாவட்டம், அன்னூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பாரம்பரியமிக்க வள்ளிக் கும்மி ஆட்டமாடினா். இதில், ஆண்கள், பெண்கள், சிறுவா்-சிறுமிகள் பங்கேற்று வள்ளியம்மன் வரலாறு பாடியபடி நடனமாடினா். இதை ஏராளமானோா் பாா்த்து ரசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com