அழகுமுத்துக்கோன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா. சிவமுருகன் ஆதித்தன்.
தூத்துக்குடி
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா
உடன்குடி, ஜூலை 11:
உடன்குடி பகுதியில் பாஜக சாா்பில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதையொட்டி, உடன்குடி வடக்கு பஜாா், சாதரக்கோன்விளை, தேரியூா் பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட அழகுமுத்துக்கோன் படத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொதுச்செயலா் இரா. சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் அக்கட்சியினா், ஊா் மக்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் அழகேசன், நிா்வாகிகள் தமிழ்ச்செல்வி, செந்தூா்பாண்டி, சோ்மலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

