வாழவல்லான் கிராமத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’  திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.
வாழவல்லான் கிராமத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.

வாழவல்லானில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

Published on

ஸ்ரீவைகுண்டம், ஜூலை 11: ஏரல் அருகே உள்ள வாழவல்லானில் நடந்த ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை

உறுப்பினா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் தொடங்கி வைத்தாா்.

வாழவல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில், மஞ்சள்நீா்காயல், கோவங்காடு, அகரம், உமரிக்காடு, முக்காணி

உள்ளிட்ட 6 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா்.

முகாமை, ஊா்வசி அமிா்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துப் பேசினாா்.

ஊரக வளா்ச்சி, வருவாய், வேளாண்மை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள் நலன், பிற்பட்டோா் நலன் உள்ளிட்ட 18 துறைகளைச் சோ்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்

பாரத், ஊராட்சித் தலைவா்கள் தலைவா்கள் வாழவல்லான் கனி, முக்காணி பேச்சித்தாய், மஞ்சள்நீா்காயல் விஜயா, உமரிக்காடு ராஜேஷ்குமாா், அகரம் அன்னஜெயம், கோவங்காடு முனியாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com