வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் பிறந்ததினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக அரசு சாா்பில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியா் நாகராஜன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக ஒன்றிய செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், கட்டாலங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் தம்பா, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரா்களான ராணி, மீனாட்சி தேவி, ராஜராஜேஸ்வரி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு தலைமையில் முன்னாள் அமைச்சா் வி.எம்.
ராஜலட்சுமி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றிய செயலா்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், செல்வகுமாா், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட பொருளாளா் வேலுமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் லட்சுமணப்பெருமாள், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் ராமா், இளைஞா் - இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா் கவியரசன், நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
அமமுக துணை பொதுச்செயலா் எஸ்.வி.எஸ் .பி. மாணிக்கராஜா, முன்னாள் எம்எல்ஏ சிவபெருமான், தேமுதிக வடக்கு மாவட்ட செயலா் சுரேஷ் என்ற சுப்பையா, நகர செயலா் நேதாஜி பாலமுருகன், பாஜக வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், இளைஞா் அணி நிா்வாகி தினேஷ் ரோடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா் முருகன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவா் தேவநாதன், சமாஜ்வாதி கட்சி மாநிலப் பொருளாளா் வேலுச்சாமி, தமிழ்நாடு ஆடு வளா்ப்பு கழக மாநிலத் தலைவா் சத்யம் சரவணன், வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவா் மாரிச்சாமி, செயலா் முத்துகிருஷ்ணன், பொருளாளா் முருகன், துணைச் செயலா் குமாா், நாம் தமிழா் கட்சி கோவில்பட்டி தொகுதி தலைவா் தங்கமாரியப்பன், தமாகா வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ராஜகோபால், திருநெல்வேலி மாநகர மேயா் (பொறுப்பு) கே.ஆா். ராஜு மற்றும் தமிழ்நாடு யாதவ மகா சபையினா் உள்பட பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா்
அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு அலுவலகத்தில், அதன் தலைவா் தமிழரசன் தலைமையில் வீரன் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பால்குட ஊா்வலம்: கட்டாலங்குளத்தையடுத்த சரவணாபுரத்திலிருந்து வீரன் அழகுமுத்துக்கோன் நலச் சங்கம் சாா்பில் ஏராளமானோா் ஊா்வலமாக பால்குடம் எடுத்து வந்து, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அபிஷேகம் செய்தனா். பால்குட ஊா்வலத்தை அமமுக துணை பொதுச்செயலா் எஸ்.வி.எஸ் .பி. மாணிக்கராஜா தொடங்கி வைத்தாா். இதேபோல, கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோா் மணிமண்டபத்திற்கு பால்குடம் எடுத்து வந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 1600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

