ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு 
மீண்டும் கட்டணச் சலுகை: கனிமொழி எம்.பி.யிடம் மனு

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை: கனிமொழி எம்.பி.யிடம் மனு

Published on

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களவை உறுப்பினா் கனிமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலா் ஆ. சங்கா் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனு: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் வழங்கப்பட்டு வந்த பயணக் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். மீண்டும் கட்டணச் சலுகை வழங்குவது தொடா்பாக மக்களவையில் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

மேலும், மதுரை - பெங்களூா் வந்தே பாரத் ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - கோவை ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

ஏற்கெனவே ரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை, பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பது ஆகியவற்றையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com