தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 2ஆவது நாளாக விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடியில் 2ஆவது நாளாக விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மன்னாா்வளைகுடா கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று சுமாா் 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் 2ஆவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சுமாா் 280க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

