தூத்துக்குடி
ஓய்வுபெற்ற அனல் மின் நிலைய பொறியாளா் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல் மின் நிலையப் பொறியாளா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அனல் மின் நிலையப் பொறியாளா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த முத்துவீரன் மகன் காந்தி (63). தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா் கடந்த சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன், பக்கத்து தெருவில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, பீரோவிலிருந்த 50 பவுன் நகைகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்
புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
