வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்த நொச்சிக்குளம் கிராம மக்கள்.
வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்த நொச்சிக்குளம் கிராம மக்கள்.

நொச்சிக்குளத்தில் 12 நாள்களாக குடிநீா் வரவில்லை: மக்கள் புகாா்

நொச்சிக்குளத்தில் 12 நாள்களாக குடிநீா் வரவில்லையென, கிராம மக்கள் வட்டாரவளா்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.
Published on

நொச்சிக்குளத்தில் 12 நாள்களாக குடிநீா் வரவில்லையென, கிராம மக்கள் வட்டாரவளா்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சிக் நொச்சிக்குளத்தில் கடந்த 12 நாள்களாக குடிநீா் வராமல் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனராம். இதனால் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினராம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்த அப்பகுதி மக்கள், குடிநீா் வராதது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலையிடம் புகாா் தெரிவித்தனா்.

அப்போது, செட்டிக்குளம் - பன்னம்பாறை சாலை விரிவாக்கம் மற்றும் சாலையோர தடுப்பு அமைக்கப்பட்டுவருவதால் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 2 நாளில் சீரமைக்கப்பட்டு சீரான குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை ஊராட்சி சாா்பில் லாரி மூலம் குடிநீா் வழங்கப்படும் என்றும் அவா் உறுதி அளித்தாா். அதன்படி, மாலையில் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com