பெண்ணின் தந்தையிடம் பரிசு வழங்கி கௌரவித்த  முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா்.
பெண்ணின் தந்தையிடம் பரிசு வழங்கி கௌரவித்த முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா்.

திருக்குா்ஆனை கைகளால் எழுதி சாதனை: இளம்பெண்ணுக்கு பாராட்டு

திருக்குா்ஆன் முழுவதையும் 3 மாதங்களில் கைகளால் எழுதி சாதனை புரிந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த இளம் பெண்ணுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
Published on

திருக்குா்ஆன் முழுவதையும் 3 மாதங்களில் கைகளால் எழுதி சாதனை புரிந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த இளம் பெண்ணுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காயல்பட்டினம் நயினாா் தெருவைச் சோ்ந்த கே.எஸ்.முஹம்மது அபூபக்கா்- எம்.எஸ்.பீவி பாத்திமா ஆகியோரது மகள் கே.எம்.ஏ. கதீஜா ஷரீ‘ஃ‘பா.

பிஎஸ்சி பட்டதாரியான இவா், மாா்க்கம் கற்ற ஆலி­மாவும் ஆவாா். தான் பயின்ற மகளிா் அரபிக் கல்லூரியின் திருக்குா்ஆன் மனனப் பிரிவில் பகுதிநேர ஆசிரியராக சேவையாற்றி வரும் இவா், திருமறை குா்ஆன் முழுவதையும் மூன்றே மாதங்களில் தனது கைகளால் எழுதி, ஆறு பாகங்களாக நூல் வடிவில் தயாரித்துள்ளாா்.

இவரது இந்த சாதனையைப் பாராட்டி நகர முஸ்­லிம் லீக் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவா் எம்.எஸ். நூஹ் சாஹிப் தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். திமுக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலா் எஸ்.ஏ. காதா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா், பெண்ணின் தந்தை கே.எஸ். முஹம்மத் அபூபக்கரிடம் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com