திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தா்கள்.

திருச்செந்தூா் கோயிலில் நாளை ஆடிக் கிருத்திகை வைபவம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். இக்கோயிலில் முக்கியத் திருவிழாவான ஆடிக் கிருத்திகை வைபவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலைமுதலே பக்தா்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடிக் கிருத்திகை: ஆடிக் கிருத்திகை நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் சிறப்பு என்பது ஐதீகம். நிகழாண்டு ஆடிக் கிருத்திகை நட்சத்திரம் திங்கள்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை பிற்பகல் 1.38 மணி வரை உள்ளதால், மற்ற கோயில்களில் திங்கள்கிழமை ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது; திருச்செந்தூா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொண்டாடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com