தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா: நற்கருணை பவனி
தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 3 ஆம் நாள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு, காலையில் புது நன்மை திருப்பலி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், அமலோற்பவ மாதா வாலிபா் சபையினா், புனித வின்சென்ட் தே பவுல் சபையினா், ஸ்டேட் வங்கி காலனி பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மலையாளத் திருப்பலி, மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடைபெற்றது.
மாலையில், ஏழு கடல்துறை, கடலோர பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி நடைபெற்றது. பின்னா் முக்கிய நிகழ்வான ஜெபமாலை, நற்கருணை பவனி ஆயா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

